வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்!

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள சிட்டி ஹாட்வெயார், பழைய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள கஜன் புக் சென்ரர், மற்றும்விநாயகர் மரக்காலை என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனைய ஊழியர்களிற்கு இன்றையதினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள் தொடர்பான தகவல்களும் சுகாதாரப்பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here