முன்னாள் வன்னி எம்.பி கே.பாலச்சந்திரன் காலமானார்!

முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் இன்று (22) மாரடைப்பால் காலமானார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது.

1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார்.

வவுனியாவில் வசித்து வந்த இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டிருந்தார்.

1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here