வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்றாளர்கள்: பிந்திய நிலவரம்!

வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் பிரபல ஒப்பந்த நிறுவனமான மாகா சேர்ந்த மூன்று ஊழியர்களிற்கு கொரொனொ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மாகா ஒப்பந்த நிறுவனம் வவுனியா வடக்கின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அவர்களது இணைப்புக்காரியாலம் ஒட்டுசுட்டான் வீதி நெடுங்கேணியில் அமைந்துள்ளது.

அங்கு பணியாற்றும் 25 பேருக்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முன்தினம் (20) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பரிசோதனை முடிவுகளிற்கமைய தென்பகுதிகளில் இருந்து அண்மையில் அலுவலகத்திற்கு வந்திருந்த 3 ஊழியர்களிற்கு கோரோனோ தொற்று பீடித்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உதவி திட்ட பொறியியலாளர், களஞ்சிய உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப பகுதியை சேர்ந்த ஒருவர் என மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பிலியந்தல, பதுளை, தெகியோவிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். அத்துடன் ஏனைய சில ஊழியர்களுடனும் அவர்கள் தொடர்பை பேணியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகா ஒப்பந்த நிறுவனத்தில் நூறிற்கும் மேற்பட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருவதுடன் உள்ளூர் தொழிலாளிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மூவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து வவுனியா வடக்கில் குறித்த நிறுவனம் சார்பில் பணியாற்றிவருபவர்கள் அனைவரும் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலேயே சுயதனிமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் இன்று பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஊழியர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள் தொடர்பான தகவல்களும் சுகாதாரப்பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய ஊழியர்களிற்கும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னரே பரவல் நிலை தொடர்பாக தெரிவிக்க முடியும் என சுகாதாரதுறையினர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here