நேற்று (21) அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500 ஐ கடந்துள்ளது.

நேற்று (21) 166 தொற்றாள்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டது. தற்போது, மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,508 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று நாட்டில் 167 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒருவர் எதியோப்பியாவிலிருந்து திரும்பி தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்தவர்.

நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 5,978 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 14 வெளிநாட்டினர் உட்பட 2,464 தொற்றாளர்கள் நாடு முழுவதும் 23 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here