20வது திருத்தம்: இன்று வாக்கெடுப்பு!

அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்ட வரைவு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (22) மாலை நடைபெறும்.

நேற்று (21) ஆரம்பித்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை தொடர்ந்து, இன்றும் விவாதம் இடம்பெற்று, இரவு 7.30 மணியளவில் வாக்கெடுப்பிற்கு விடப்படும்.

19 வது திருத்தத்தின் ஒரு சில உட்பிரிவுகளைத் தவிர, மிகுதியானவை நீக்கப்பட்டு, புதிய உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது சர்வாதிகார ஆட்சிக்கு வழிசமைப்பது என எதிர்க்கட்சிகள், நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இன்று மூன்றாவது வாசிப்பில் வரைபில் கூடுதல் திருத்தங்களை அரசாங்கம் கொண்டு வரும்.

திருத்தம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும்.

இன்று விவாதத்தைத் தொடர்ந்து, மூன்றாவது வாசிப்பு இரவு 7. 30 மணிக்கு நடைபெறும். மூன்றாம் வாசிப்பின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here