குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பதிவு செய்தே வரலாம்!

முன்பதிவு செய்துகொள்ளப்பட்ட தினத்தில் மாத்திரம் சேவையை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பத்தரமுல்ல பிரதான அலுவலகத்திற்கு வருகை தருவதற்கு செல்லுபடியான தினத்தை முன்பதிவு செய்துகொள்வது அவசியமாவதுடன் திணைக்களத்தினால் உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் மாத்திரம் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரவேண்டும் என்று பொது மக்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம்.

இதேபோன்று, குறித்த செல்லுபடியான முன்பதிவு தினம் இன்றி வருகை தரும் நபர்கள் மற்றும் தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேச பொது மக்கள் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here