நாளை முதல் மெனிங் சந்தை பூட்டு!

புறக்கோட்டை மெனிங் சந்தை நாளை காலை 10 மணி முதல் திங்கள் கிழமை வரை மூடப்படும்.

பொலிசாரின் உத்தரவையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு சந்தையை மூடுமாறு பொலிசார் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்திய போதிலும், நாளை காலை வரை செயல்பட முடிவு செய்யப்பட்டது.

வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று நிமல் அத்தநாயக்க குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here