மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

களுத்துறை மாவட்டத்திலுள்ள அகலவத்தை, பாலிந்தனுவர பிரதேச செயலகங்களில் உள்ள பல கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவில் கொரககொட, வெரகம, அகலவத்த, தபிலிகொட மற்றும் கேகுலந்த வடக்கு கிராம சேவகர் பிரிவும், பாலிந்தனுவர பிரதேச செயலகத்தின் பெல்லன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here