ரிஷாத்தை சபை அமர்வில் கலந்து அனுமதிக்குமாறு நாடாளுமன்றம் கோரிக்கை!

நா்டாளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு அனுமதி வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோரை நாடாளுமன்றம் கோரியுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார்.

நாளை வியாழக்கிழமை, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகளில் ரிஷாத்தை பங்கேற்க அனுமதிக்குமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாத்தை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாளை (22) 20வது திருத்தம் மீதான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறும். அத்துடன், வெள்ளிக்கிழமை கொரோனா நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here