20வது: திருத்தம் அரசு முன்வைத்துள்ள சில திருத்தங்கள்!

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று (21) காலை நாடாளுமன்றத்தில் தொடங்கியது.

விவாதம் இன்று இரவு 7:30 மணி வரை நடைபெறும். நாளை காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கும்.

20வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சி வாகன பேரணியாக நாடாளுமன்றத்திற்கு வந்தனர். கைகளில் சிவப்பு பட்டி அணிந்திருந்தனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் சபையின் சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன, வரைவு தொடர்பான திருத்தங்களை இன்று மாலை 6 மணிக்கு முன் நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விவாதத்திற்குப் பிறகு வரைபின் ஒரு பிரிவு மீது வாக்கெடுப்பு கோரப்பட்டால், வாக்கெடுப்பு நடைபெறும். அத்துடன், வரைபு முழுமையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, சபாநாயகரின் கையொப்பம் திருத்தப்பட்ட tரைபில் இடப்பட்டதை தொடர்ந்து, சட்டமாக மாறும்.

நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று விவாதத்தைத் ஆரம்பித்த பின்னர் மாற்றங்களை முன்வைத்தார்.

விவாதத்தின் போது மேலும் மாற்றங்களை பரிசீலிக்க அரசு தயாராக இருக்கும் என்று அவர் கூறினார்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றம் (எஸ்சி) ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

தற்போதைய வடிவத்தில் உட்பிரிவுகள் 3,5, 14, மற்றும் 22 வது பிரிவுகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரிவு 3 என்பது ஜனாதிபதியின் சட்டவிலக்கு அதிகாரத்தை குறிக்கிறது. இதில் குழு நிலை விவாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். நியாயமான தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு பொருத்தமான ஏற்பாடுகளை வழங்குவது குறித்த 5வது பிரிவில், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சில சரத்துக்கள் இணைக்கப்படும். பிரிவு 14 இ்ல், இரண்டரை வருடங்களின் பின் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here