குற்றச்சாட்டுக்குள்ளானவருக்கு விசாரணைக்குழு தலைவர் பொறுப்பு: மட்டு மாவட்ட செயலகத்தின் புரட்சி!

மட்டக்களப்பு சந்திவெளி சமுர்த்தி வங்கி இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆவணங்கள் தீமூட்டப்பட்ட சம்பவத்தை ஏற்கனவே தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது. அந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாவட்ட செயலகத்தால் நியமிக்கப்பட்ட குழு பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு கணக்காளராக அரசியலமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்டு, பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்ட பஷீர், இந்த விசாரணைக்குழுவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், அரச உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட சிலர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காசோலையில் போலியாக கையொப்பமிட்டு மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டில், விசாரணை இன்னும் முடியவில்லை. அந்த கையொப்பம் தொடர்பாக தொழில்நுட்ப ரீதியான விசாரணைகளையோ, உறுதிப்படுத்தல்களையோ பஷீர் சந்திக்கவில்லை. கைதான ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் தேக்கமடைந்துள்ளன.

முழுமையான விசாரணைகள் முடியாத நிலையில், இப்படியான பொறுப்பு வாய்ந்த விசாரணைக்குழு பணியில் அவரை எப்படி மாவட்ட செயலகம் இணைத்தது?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here