கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று பிற்பகல் 2.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

விவசாயக்குழுக்கூட்டத்தில் மாவட்டச்செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள்​ கமநல அபிவிருத்தித்திணைக்கள, நீர்ப்பாசன திணைக்க, விவசாயத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்​ கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்டத்தில் விவசாயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டி எழுந்துள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக சமூக இடைவெளியை பேணியவாறு மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here