மதுஷின் உடலை உரிமை கோரிய இரண்டு மனைவிகள்!

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மாக்க்துர மதுஷின் உடலை பொறுப்பேற்பதில் இரண்டு மனைவிகளிற்கிடையில் இழுபறியேற்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நீதிமன்ற உத்தரவிற்கடைய சட்டபூர்வ மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று (20) காலை மாளிகாவத்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பிரபல பாதாள உலகக்குழு தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரனுமாகிய மதுஷ் கொல்லப்பட்டார்.

அவர் இரண்டு திருமணங்கள் செய்துள்ளார்.

மாத்தறையில் கயானி முத்துமலியை அவர் சட்டபூர்வமாக திருமணம் செய்திருந்தார். அதன்பின்னர், இலங்கையில் நெருக்கடி அதிகரிக்க, இலங்கையிலிருந்து தப்பிச் சென்று, டுபாயில் வசித்து வந்தார்.

இதன்போது, கொல்லப்பட்ட இன்னொரு பாதாள உலகக்கும்பல் தலைவனான களுதுஷாராவின் விதவை மனைவியான திலினியை டுபாய்க்கு அழைத்து, அவருடன் வாழ்ந்து வந்தார். இரண்டு திருமணங்களிலும் மதுஷிற்கு பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவியின் குழந்தையின் பிறந்தநாளை டுபாயில் கொண்டாடிய போதே, கூண்டோடு சிக்கியிருந்தார்.

இன்று காலை மதுஷ் கொல்லப்பட்ட பின்னர், சட்டபூர்வ மனைவி கயானி முத்துமாலி சடலத்தை அடையாளம் காண அழைத்து வரப்பட்டார். இதன் பின்னர் நீதிவான் விசாரணைகள் நடந்தன.

சம்பவம் நடந்த நேரத்தில் மதுஷின் இரண்டாவது மனைவி திலினியும் சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மதுஷின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரியுள்ளார். இரண்டு பேர் உரிமை கோரியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மதுஷின் உடலை அவரது சட்டப்பூர்வ மனைவியிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுஷ் தனது முதல் மனைவி கயானி முத்துமாலியுடன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது திருமணத்தை தனது இரண்டாவது மனைவி திலினியுடன் பதிவு செய்யவில்லை. அதன்படி, மதுஷின் உடல் அவரது முதல் மனைவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இறுதிச்சடங்குகள் மாத்தறையில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here