ஊடகவியலாளர்களை தாக்கியவர்களிற்கு தொடர்ந்து விளக்கமறியல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர்

தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020 அன்று முதல் வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கு 20.10.2020 இன்று திகதியிடப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களை தொடர்ந்தும் 03.11.2020 வரை விளக்மறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த வழக்கு 03.11.2020 அன்று தவணையிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சாப்பில் சட்டத்தரணிகளான எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா, திருமதி துஸ்யந்தி சிவகுமார், கனகரத்தினம் பார்த்தீபன், ஆகியோர் முன்னிலையானதுடன் மரக்கடத்தல்காரர்கள் என கருதப்படும் தாக்குதலாளிகள் சார்பில் அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட 7 சட்டவாளர்கள் மன்றில் ஆயராகி இருந்தனர்

ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வெளியில் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களின் ஒளிப்படங்கள் இருந்த போதும் அவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here