பெரும்பாலான உறுப்பினர்கள் சட்டவிரோத நடவடிக்கையை ஆதரிப்பதால், நானும் அதற்கு ஆதரவு: கரைத்துறைப்பற்று தவிசாளர் மிரள வைக்கும் பதில்!

கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் கீழ் உள்ள தண்ணீர்ஊற்று நீராவிப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறுகின்ற வீதியோர சந்தை நடவடிக்கைகள் காரணமாக தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து அண்மையில் முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்று சந்தை வியாபாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த வீதியோர சந்தை ஆரம்பிக்கப்படும் போது இது இவ்வாறு இயங்கவிடுவதால் பிரதேச சபையினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்று சந்தை வர்த்தகர்கள் இந்த சந்தை இயங்குவதால் தமக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தி இதனை உடனடியாக நிறுத்துமாறும் தெரிவித்து வந்தனர். இந் நிலையிலும் பிரதேசசபையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்டு வந்த மக்கள் அண்மையில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அன்றைய போராட்டத்தின்போது வருகை தந்த பிரதேசசபையின் தவிசாளர், அந்த சந்தையினை முள்ளியவளையில் வாராந்த சந்தைக்கு ஒதுக்கப்பட்ட உரிய இடத்திற்கு மாற்றுவதாக தெரிவித்து சென்றிருந்தார். அதுதொடர்பான ஒலிபரப்பும் பிரதேச சபையினால் செய்யப்பட்டிருந்தது.

அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமைகளில் குறித்த நடவடிக்கையை மேற் கொள்ள முற்பட்டபோது போலீசாருடன் சென்று அந்த கடைகளை தடுத்து நிறுத்தி முள்ளியவளையில் ஒதுக்கப்பட்ட வாராந்த சந்தை இடத்திற்கு சந்தை நடத்த முற்பட்டபோது குறித்த இடத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் கையொப்பமிட்டு அந்த இடத்திலேயே நடத்துமாறு தெரிவித்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததாகவும் அதன் பின்னணியில் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாகவும் அதனை தொடர்ந்து வருகை தந்த பிரதேச சபை அமர்வில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோது 18 உறுப்பினர்கள் குறித்த பகுதியில் இடம்பெற்ற வாராந்த சந்தை குறித்த இடத்திலேயே நடத்துவதற்கு தற்காலிகமாக தீர்மானித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக வாராந்த சந்தை உரிய இடத்திற்கு மாற்றப்படாது வீதியோரங்களில் நடத்தப்படுவதால் பல லட்சம் ரூபாய் செலுத்தி பிரதேச சபையில் கடைகளை வாடகைக்கு சந்தைக்குள் கடைகளை பெற்ற தாம் பாதிக்கப்படுவதற்குரிய ஒரு தீர்வை உடனடியாக பெற்றுத் தருமாறு நேற்று தண்ணீர் ஊற்று மற்றும் முள்ளியவளை சந்தை வர்த்தகர்கள் தண்ணீர்ஊற்று சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வருகை தந்த கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், குறித்த பிரதேச சபையில் நடந்த விடயங்களையும் அதனால் பிரதேச சபையில் உடைய 18 உறுப்பினர்கள் அந்த முடிவுக்கு ஆதரவாக இருப்பதால் தன்னால் எதையும் செய்ய முடியாத நிலைக்கு சென்று இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கின்ற பிரதேச சபை தவிசாளர் இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் தற்காலிகமாக அவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரிய நிலையில் தன்னால் எதையும் செய்ய முடியாது என்று தெரிவித்த நிலையில் மக்கள் தாங்களும் சந்தை கட்டடங்களை விட்டு வெளியில் வந்து விற்பனைகளை நாளை முதல் செய்ய உள்ளதாகவும் தங்களிடமும் வரி அளவிடும் செயல்பாடுகள் எதையும் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.

இதன்போது அங்கிருந்த மக்கள் அவ்வாறெனில் இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது என கேள்வி எழுப்பிய போது இது பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த தீர்மானத்திற்கு எதிராக நீங்கள் சென்று நீதிமன்றத்தை நாடி வழக்கு வையுங்கள் என்றவாறு பொறுப்பற்ற தனமாக பதிலளித்து இருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

குறிப்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபையில் அதற்கு சார்பாக எந்தவிதமான தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாது எனவும் அறியமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here