டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

டெங்கு நுளம்பு பரவாதவாறு  பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ் குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதன் காரணமாக இனி வரும் நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
வழமையான யாழ் மாவட்டத்தில் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயால்  பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது வழமை. அதேபோல் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளது. எனவே பொதுமக்கள் நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானம்  செலுத்தல் வேண்டும். மற்றும் தங்களுடைய வீடுகளில் நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்களை  நுளம்பு பெருக்கம் ஏற்படாதவண்ணம் பாதுகாத்தல் வேண்டும்.
 கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு இன்று வரை டெங்கினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படுகின்றது. எனினும் அந்த நிலைமையினை  மேலும் தொடர்ச்சியாக பேணுவதற்கு பொது மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்
நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது அதேபோல யாழ் மாவட்டத்தின் சகலஇடங்களிலும் நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுச் சுகாதார பரிசோதகர்களினாள் ஒவ்வொரு பிரதேசத்திலும் நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் தமது வீடுகளில்,சுற்றாடலில்  நுளம்பு பெருக்கம் ஏற்படும் இடங்களை சுத்தப்படுத்தி டெங்கு நுளம்பு பெருகாத வகையில் தமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள் வதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்கு நோய் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனினும் இனிவரும் மாதங்களில்  டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது வழமை. எனவே பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பிலும்  விழிப்பாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here