மேலும் 47 பேருக்கு தொற்று!

நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 47 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கோகொட தொற்று அலையுடன் தொடர்புடைய 21 பேரும், தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 19 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, மினுவாங்கோகொட தொற்று அலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரிக்கிறது.

இன்று 87 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று 37 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,440 ஆக அதிகரித்துள்ளது.

16 வெளிநாட்டினர் உட்பட 2,172 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள 20 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 297 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here