பிரான்ஸில் தமிழர் குத்திக்கொலை: அவரது வீட்டில் இலவசமாக தங்கியிருந்த தமிழர்களே கைவரிசை!

குசன்வீல்,ரூ ரேமண்ட் லாப்சினில் கொலை நடைபெற்ற பகுதி

பிரான்ஸில் இலங்கைத் தமிழர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். அவரது கொலையுடன் தொடர்புடைய மூன்று இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸின் actu17 இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் (Goussainville) ரூ ரேமண்ட் லாப்சினில் பகுதியில் இந்த படுகொலை நடந்தது.

புதன்கிழமை (18) பிற்பகல் 6.45 மணியளவில் பொலிசாருக்கு தகவல் வழங்கபபட்டதையடுத்து, பொலிசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். எனினும், குறிப்பிட்ட நபர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். அவரது உச்சந்தலையில் காயம் காணப்பட்டது.

அவரது வீட்டில் தங்கியிருந்த 52, 42 வயதுடைய இரண்டு தமிழர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போது அவர்கள் மதுபோதையில் நிதானமிழந்த நிலையில் காணப்பட்டனர். பொலிசாரிடம் உளறியும் கொட்டியுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் ஒருவரும் பின்னர் கைதாகியுள்ளார்.

முன்னர் கைதான இருவரையும், கொலையுண்டவர் தனது வீட்டில் இலவசமாக தங்க வைத்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here