ரிஷாத்துக்கு உதவியதாக 7 பேர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்படுவதிலிருந்து தவிர்க்க  உதவியதற்காக மேலும் 7 நபர்களை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதன தெரிவித்தார்.

முன்னதாக வெல்லம்பிட்டியில் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். ரிஷாத்தை மறைக்க உதவியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரிஷாத் தங்கியிருந்த இடம் குறித்த தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

களுபோவில, கொஹூவெலவில் உள்ள வீடொன்றில் இரண்டு நாட்கள் இருந்ததாகவும், 15ம் திகதி தெஹிவளையிலுள்ள வீடொன்றிற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதானவர்களில் மருத்துவர் மற்றும் மனைவி, வெளியுறவு நிறுவன பிரதிநிதியொருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் கைது செய்யப்பட்ட வெளியுறவு நிறுவன பிரதிநிதி, கொஹுவெலவிலிருந்து தெஹிவளைக்கு ரிஷாத் பயணிக்க உதவியதாக அடையாளம் காணப்பட்டார்.

எம்.பி.யை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் இன்று காலை தெஹிவளை, எபினேசர் பிளேஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சிஐடியால் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here