ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிணறொன்றில் வீழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கலேவாவெல, ரன்வெடிய பகுதியில் இந்த சம்பவம் இன்று நடந்தது. வயலுக்கு நீர் இறைக்க தோண்டப்பட்டிருந்த கிணற்றிற்குள் அவர்கள் விழுந்துள்ளனர்.

நீரில் மிதந்த நிலையில் 3 சிறார்களின் சடலங்களும் மீட்கப்பட்டதாக மாத்தளை பொலிசார் தெரிவித்தனர்.

கிணற்றிற்குள் அவர்கள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாமென பொலிசார் தெரிவித்தனர். காலையிலிருந்து காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7, 12 வயது சிறார்களும், 15 வயதான சகோதரியுமே உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here