மீள் உருவாக்கத்திற்காக பொலித்தீன் கழிவுகளை சேகரிக்கும் முன்னுதாரணமான மாணவர்கள்

சாவகச்சேரி நகராட்சிமன்ற பொதுச்சுகாதாரப் பரிசோதகரின் வழிநடத்தலில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சேகரித்து மீள்உருவாக்கல் நிலையத்தில் மாணவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் உக்காத கழிவுப் பொருட்கள் மீளுருவாக்கல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் உக்காத கழிவுப் பொருட்களை மீள் உருவாக்கல் நடவடிக்கைக்காக சேகரிக்கப்படுகின்றது. இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை சாவகச்சேரி நகராட்சிமன்ற பொதுச்சுகாதார பரிசோதகர் பி.தளிர்றாஜ் மேற்கொண்டு வருகின்றார்.

அவரின் வழிநடத்தலில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி தரம் 6 மாணவன் ந.அபர்ணன், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி தரம் 5 மாணவன் அ. கரிஷ் ஆகியோர் இணைந்து தமது வீட்டு சுற்றாடலில் சேகரித்த பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகளை மீளுருவாக்கல் நிலையத்தில் பொதுச்சுகாதாரப் பரிசோதகரிடம் கையளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here