முகக்கவசம் அணியாதவர்கள் மடக்கிப்பிடிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸ் தாக்கம் காரணமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முகக் கவசம் அணியாதோரை பிடித்து எச்சரிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை முதல் முகக்கவசம் அணியாதோரை பிடிக்கும் பாரிய சோதனை நடவடிக்கையானது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முகக்கவசம் அணியாது பயணம் செய்த பெரும் எண்ணிக்கையிலான வாகன சாரதிகள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் பிடிபட்ட நிலையில் முகக்கசவம் இல்லாதவர்களுக்கு பொலிஸாரின் இலவசமாக முகக்கவசம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு முகக்கவசம் அணியாதோர் எச்சரிக்கப்பட்டதுடன், மீண்டும் முகக்கவசம் அணியாது பிடிபட்டால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

குறித்த சோதனை நடவடிக்கையானது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முக்கிய பகுதிகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவுடன் இணைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பேருந்து, முச்சக்கரவண்டி தொடக்கம் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு அறிவூட்டலும் செய்து வருகின்றனர்.

கொரோணா வைரஸ் அபாயம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வீதிகளில் நின்று பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here