மலையக மக்கள் முன்னணியின் மாவட்ட தலைவர்கள் கௌரவிப்பு

மலையக மக்கள் முன்னணியின் மீள் கட்டமைப்பு செயற்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்ட பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க மற்றும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு மாவட்ட தலைவர்களையும் மாவட்ட செயலாளர்களையும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஹட்டன் மலையக மக்கள் முன்னணயின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்¸ முன்னணியின் அரசியல்துறை தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் அங்கத்தத்தினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here