ரிஷாட் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) அதிகாலை தெஹிவளை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 நாட்களாக ரிஷாட்டை தேடி 6 சிஐடி குழுவினர் தேடுதல் நடத்திய நிலையில், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

தெஹிவலை எபினேசர் மவத்தையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ரிஷாத் பதியுதீன் தலைமறைவாக இருக்க உதவியவர்களுக்கும் எதிராக 209 வது பிரிவின் கீழ் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவர் தற்போது சிஐடி தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படுவதாகவும், இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here