பேருந்திலிருந்து பரவிய கொரோனா: கொழும்பு dockyard இல் 5 பேருக்கு கொரோனா!

கொழும்பு கடற்படை கப்பல்துறையின் (dockyard) ஐந்து ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஐந்து ஊழியர்களின் நெருங்கிய கூட்டாளிகள் ஏற்கனவே புலனாய்வு மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

மத்துகம பேருந்துடன் தொடர்புடையதே, கொழும்பு கடற்படை கப்பல்துறையில் அடையாளம் காணப்பட்ட தொற்று என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மத்துகம பேருந்து உரிமையாளர், சாரதி, நடத்துனர், அந்த பேருந்தில் பயணித்த கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி ஆகியோர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அந்த பேருந்தில் பயணித்த துறைமுக ஊழியர் ஒருவரும் தொற்றுக்குள்ளானவர்களில் அடங்குகிறார். அவர் மூலம், ஏனைய நால்வரிற்கும் பரவியிலிருக்கலாமென கருதப்படுகிறது.

இதனால் துறைமுக பணிகள் பாதிக்கப்படாது. கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பணிகள் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here