பெரமுன ஆதரவு கட்சித் தலைவர்கள் இன்று கூடுகிறார்கள்!

20 வது திருத்தம் குறித்து விவாதிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம மவத்தையில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும்.

எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் 20வது திருத்தம் மீதான விவாதத்தின் போது, பரிந்துரைக்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இன்று விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட ஆட்சிக்கு அச்சுறுத்தலான விதத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்க கோட்டாபய ராஜபக்ச தரப்பினரால் 20வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மஹிந்த ராஜபக்ச ஆதரவு தரப்பினரிடம் அதிருப்தியிருப்பதாக கருதப்படும் நிலைமையில், இன்றைய கூட்டம் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here