முகக்கவசம் அணியாத பிரபல நடிகைக்கு அபராதம்!

முக கவசம் அணியாமல் காரில் சென்ற நடிகை அதிதி பாலனிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பலரும் முக கவசம் அணியாமல் திரிவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏரிச்சாலை வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் இருந்த 2 பேர் முக கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களில் ஒருவர் நடிகை அதிதி பாலன் என்பது தெரியவந்தது. இவர் தமிழில் அருவி என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். இதையடுத்து முக கவசம் அணியாத அதிதி பாலன் உள்பட 2 பேருக்கும் அதிகாரிகள் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த நடிகை அதிதி பாலனும், அவருடன் வந்தவரும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உண்டானது. அதற்கு அதிகாரிகள் தரப்பில், அரசு சட்ட விதிப்படி தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தலா ரூ.200 அபராதத்தை கட்டிவிட்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here