ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலிற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கண்டனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல் காரர்களால் தாக்கப்பட்டுள்ளமையினை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள்.

இது தொடர்பிலான ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று (17) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ம.ஈஸ்வரி நடத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மறைமுகாம தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் குற்றவாளிகளுக்கு நேர்iமாய தண்டனை கிடைக்க வேண்டும்.

இலங்கையில் ஊடகங்கள் சுதந்திரமாக கருத்தினை வெளியிடுவதற்கு அரசிடம் வேண்டுகின்றோம். ஊடகத்துறை அமைச்சரிடமும் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

தற்போது உள்ள ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளில் பெயர் மாற்றங்கள் செய்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். இது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை திசை திருப்பி இல்லாமல் செய்தவற்கான செயற்பாடாக அமைகின்றது.

2009 இல்ர் அமைச்சர் அவர்களும் அரசில் அங்கம் வகித்தவர் அவருக்கும் தெரியும் இறுதியில் என்ன நடந்தது என்று நாங்கள் படையினரிடம் கையளித்தவர்கள், வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் தான் நாங்கள் தேடுகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here