வெளிநபரின் உதவியுடன் மாணவர்கள் பரீட்சையெழுத அதிபரே உதவினாரா?: விசாரணை ஆரம்பம்!

க.பொ.த உயர்தர பரீட்சை மையமொன்றில் வெளிநபரின் உதவியுடன் மாணவர்கள் பரீட்சை எழுத அதிபர் ஒருவர் உதவியதாக கூறப்படும் விவகாரம் குறித்து கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நீர்கொழும்பிலுள்ள பாடசாலையில் உள்ள பரீட்சை மையத்தில் இந்த சம்பவம் நடந்தாகவும், மாணவர்கள் வினாத்தாள் ஒன்றிற்கு வெளிநபர் ஒருவரின் உதவியுடன் விடையளிக்க பாடசாலை அதிபர் உதவியதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இந்த விவகாரத்தை சிஐடியினர் விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here