நியூசிலாந்தில் எம்.பியான முதலாவது இலங்கைப் பெண்!

நியூசிலாந்து பொதுதேர்தலில் இலங்கையில் பிறந்த நியூசிலாந்து பெண்ணான வனுஷி வோல்டர் வெற்றிபெற்று எம்.பியாகியுள்ளார். இலங்கை பூர்வீகத்தையுடைய முதலாவது நியூசிலாந்து எம்.பி வனுஷி ஆவார்.

நடந்து முடிந்த நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆடெனின் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

இந்த நிலையில் வடமேற்கு ஒக்லாந்தின் Upper Harbour தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையில் பிறந்து, நியூசிலாந்தில் குடியேறிய வனுஷி வோல்டர் வெற்றிபெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய கட்சியின் வேட்பாளரான முன்னாள் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், ஹமில்டன் கிரிக்கெட் வீரருமான ஜேக் பெசன்ட் 12,727 வாக்குகளை பெற்றார். வனுஷி 14,142 வாக்குகளைப் பெற்றார்.

இலங்கையில் பிறந்த வனுஷி, திருமணம் முடித்து 3 பிள்ளைகளின் தாயாக உள்ளார். பின்னர் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர், வனுஷிமனித உரிமை சட்டத்தரணியாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூத்த மேலாளராகவும் பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here