ரிஷாத்தை தேடி கிழக்கிலும் வேட்டை!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பியை தேடி கிழக்கு மாகாணத்திலும் சி.ஐ.டி குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளன.

ரிஷாத்தை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டு நான்கு நாட்கள் கழிந்த பின்னர்- கொழும்பு, புத்தளம், மன்னாரில் நடத்திய தேடுதல்களில் பலனில்லாமல் போன நிலையில்- நேற்று கிழக்கில் சி.ஐ.டி குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டன. ரிஷாத்திற்கு நெருக்கமானவர்களின் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், சம்மாந்துறை, நிந்தாவூர், கல்முனை பகுதிகளிலுள்ள வீடுகள் நேற்று சோதனையிடப்பட்டன.

2019 ஜனாதிபதித் தேர்தலின்போது புத்தளத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக, அரச நிதிகளை செலவழித்து இ.போ.ச பேருந்துகளில் அழைத்து சென்ற குற்றச்சாட்டில் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சிஐடியினர் கொழும்பிலுள்ள ரிஷாத்தின் இல்லத்திற்கு சில முறை சென்றும் பலனிருக்கவில்லை. ரிஷாத்தின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here