ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கிய பிக்குகள்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாகக் கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், வீடு திரும்பிய ஆனந்தசங்கரியை இன்று மாலை அவரது வீட்டுக்குச் சென்ற அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நலம் விசாரித்ததுடன், விரைவில் நலம் பெற ஆசி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here