இலங்கையில் முதன்முறையாக 2,000 இற்கும் அதிக கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில்!

மினுவாங்கொட கொரோனா தொற்று அலையில் மேலும் 73 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 2 பேரும், ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்பில் இருந்த 71 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொட தொற்று அலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,972 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 5,427 ஆக உயர்ந்துள்ளது.

14 வெளிநாட்டினர் உட்பட 2,019 நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள 17 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் ஒரே சமயத்தில் 2,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி குணமடைந்தவர்களின்  எண்ணிக்கையை 3,395 ஆக உயர்ந்துள்ளது.

255 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here