மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவிற்கு பயிற்சியளித்த இந்திய கருப்பு பூனைகள்!

இந்திய மத்திய பயங்கரவாத எதிர்ப்புப் படையணி (என்.எஸ்.ஜி) இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவிற்கு பயிற்சியளித்த தகவல் வெளியாகியுள்ளத.

என்.எஸ்.ஜியின் 36வது ஆண்டு நிறைவு நிகழ்வில் அதன் இயக்குனர் எஸ்.எஸ். தேஸ்வால் இதனை தெரிவித்தார்.

இந்திய மத்திய பயங்கரவாத எதிர்ப்புப் படையணி உலகத்தரம் வாய்ந்த படையணி, மிகவும் நவீன ஆயுதங்களையும் உபகரணங்களையும் கொண்டுள்ள அணியென அவர் குறிப்பிட்டார்.

“இலங்கை பிரதமரின் நெருக்கமான பாதுகாப்புப் பிரிவின் 21 பேருக்கு என்.எஸ்.ஜி பாதுகாப்புத் திறன்களைப் பயிற்றுவித்துள்ளது. இலங்கையின் மதிப்புமிக்க பிரதமர் மாண்புமிகு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி பயிற்சியைப் பாராட்டினார்” என்று தேஸ்வால் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த பணியாளர்களுக்கு என்.எஸ்.ஜி பயிற்சியளித்த காலத்தை அவர் குறிப்பிடவில்லை.

‘கருப்பு பூனை’ கொமாண்டோக்கள் என்றும் அழைக்கப்படும் இந்த படையணி, 1984 ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது.

இந்த படையணியின் கீழ் CPF (close protection force) என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு பிரிவை கொண்டுள்ளது. இது உயர் தலைவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள விஐபிகளுக்கு Z+ பிரிவின் கீழ் பாதுகாப்பை வழங்குகிறது.

இந்தியபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா உட்பட தற்போது சுமார் 13 பேருக்கான பாதுகாப்பை CPF கவனித்துக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here