தீர்மானத்தை நிறைவேற்றி மேசைக்கு அடியில் வைப்பதுடன் சரி: கரைச்சி பிரதேசசபையை பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியானது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையில் சபையில் 2020.08.31 வரை நிறைவேற்றப்பட்ட 100 பிரேரணைகளில் இதுவைரை 66 பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 17.09.2020 திகதியில் கரைச்சி பிரதேச சபையிடம் தகவல் அறியும்
உரிமைச்சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர் ஒருவரால் கோரப்பட்ட தகவல்களுக்கு
அமைவாக சபையினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக மேற்படி விடயம்
தெரியவந்துள்ளது.

மாதாந்தம் இடம்பெறுகின்ற சபை அமர்வுகளில் பிரதேச சபை உறுப்பினர்கள்
பிரேரணைகளை கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றியுள்ளனர். அந்த வகையில் கடந்த 31.08.2020 வரை 100 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்
வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை 34 பிரேரணைகள் மாத்திரமே
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 66 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு
பிரேரணைகளாகவே இருக்கின்றன.

நடைமுறைக்கு சாத்தியமற்ற, ஒரு உள்ளுளராட்சி மன்றத்தின் சட்டவரையறைகளுக்கு அப்பால் சென்று அரசியல் இலாபங்களுக்காக பிரேரணைகளை நிறைவேற்றிவிட்டு அதனை ஊடகங்களில் செய்தியாக வெளிகொண்டு வந்துவிட்டால் மக்களுக்கான தங்களது கடமைகள் முடிந்துவிட்டது என்ற நிலையில் இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றிவருகின்றனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் ஆதாயங்களுக்காக பிரதேச சபைகளின் வரையறைகளை தாண்டி நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களே நடைமுறைக்கு கொண்டுவர முடியாதுள்ளமை தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here