36 பொலிஸ் உயரதிகாரிகளிற்கு அதிரடி இடமாற்றம்!

36 மூத்த பொலிஸ் அதிகாரிகளிற்கு உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள், எட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குநரும், குற்றவியல் புலனாய்வு பிரிவின் இயக்குநரும் இடமாற்றப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அந்த பொறுப்பை வகித்து வந்த ஏஆர்பிஜே டி அல்விஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here