கல்முனை கிறின் பீல்ட் தொடர்மாடியில் மர்மநபர்கள் நாசவேலை!

இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் 3 மோட்டார் சைக்கிள்கள், 5 துவிச்சக்கரவண்டிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறின் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பில் சனிக்கிழமை(16) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

வீட்டுத்தொகுதியின் முன்னால் தரித்துவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கரவண்டிகளிறகு இனம்தெரியாதவர்கள் தீமூட்டினர்.

தீ விபத்தில் மின்சார மின்மானிகள் சேதமடைந்த போதிலும் மின்கசிவு ஏற்படவில்லை.

இந்த நாசகார செயல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. எல்.முஹம்மட் ஜெமில் தலைமையில் பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்து முன்னெடுத்துள்ளனர்.

வீட்டுத்தொகுதியில் இனந்தெரியாத நபர்களில் சிலர் திடிரென உட்புகுந்து தீ வைத்து தப்பி சென்றதாக குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

 

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here