19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடர்கிறது!

19 பொலிஸ் பிரிவுகளில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று கோவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

நேற்று திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகள் மற்றும் மருந்தகங்கள், வார இறுதியில் திறக்க அனுமதிக்கப்படாது என்று கூறினார்.

இதற்கிடையில், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறுகையில், நாடு முழுவதையும் கொரோனா தொற்று சாத்தியமான வலயமாக சுகாதார சேவைகள் பதில் இயக்குநர் அறிவித்துள்ளார். இதனால் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள  வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்றும் கூறினார்.

தொழிற்சாலைகள் அலுவலகங்களில் முகக்கவசம் அணிந்தபடி பணியாற்ற வேண்டும், கைகள் சுத்திகரிக்கப்பட வேண்டும், அலுவலகங்களில் பணிபுரியும் தினுக்கு ஏற்ப ஊழியர்களின் தொகையை நிர்வகிக்க வேண்டும், அனைத்து நிறுவனங்களும் பார்வையாளர்களின் தொடர்பு விவரங்கள் உட்பட பதிவுகளை பராமரிக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here