காங்கேசன்துறை கடற்படை முகாம் பெண் சிப்பாய்க்கு கொரோனா!

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கற்கை நெறி ஒன்றிற்காக சில தினங்களின் முன்னர் தெற்கிற்கு சென்று வந்த குறிப்பிட்ட பெண் சிப்பாய் சுகவீனமடைந்ததை தொடர்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவருடன் கற்கைநெறிக்கு சென்று வந்த பிறிதொரு சிப்பாயும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முகாமில் பெண் சிப்பாயின் நெருங்கிய தொடர்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here