மேலும் 6 கிராமங்கள் லொக் டவுண்!

இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ரம்புக்கன பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் லொக் டவுன் செய்யப்பட்டுள்ளன.

36 வயதான ஒரு பெண் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

பின்னர், ரம்புக்கன-பின்னவல தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த மற்றொரு நபர், கேகாலை பொது மருத்துவமனையில் பி.சி.ஆர் சோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் இரணவில சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

3 கிராம சேவகர் பிரிவை சேர்ந்த இரியகொல்ல, அம்புல்-அம்பே, போரலுவ, வெரல்லகம, அலவத்த மற்றும் கிரிவல்லப்பிட்டிய ஆகியவை கிராமங்கள் லொக் டவுன் ஆகியுள்ளன. ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here