இரவு விடுதியில் முகக்கவசம் அணியாதவர்களிற்கு அபராதம்!

கொரோனா தடுப்பு வழிகாட்டல் குறிப்புக்களை பின்பற்றாமல் இரவு விடுதியில் இருந்த குழுவொன்றிற்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

நேற்று (15) இந்த சம்பவம் நடந்தது.

நான்கு பெண்கள், மூன்று ஆண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். முகக்கவசம் அணியாமல் இரவு விடுதியில் இருந்ததன் மூலம் அவர்கள் தீங்கிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிசார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனை பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து ஒவ்வொருவருக்கும் தலா 1,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here