வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழிபாட்டு தடைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு: சுமந்திரன்!

வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிசார் தடைவிதித்து வருகின்றனர்.

இந் நிலையில் இவ் வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் வழிபாட்டிற்கு செல்வதற்கு பொலிசார் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்திய தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துளார்.

வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று (16) இந்த சந்திப்பு நடந்தது.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றன.

அந்த ஆலயத்தினுடைய, பூர்வீகம், வரலாறு இவற்றை எல்லாம் வைத்து மக்கள் அங்கே வணங்குவதற்குரிய உரித்து அவர்களுக்கு இருக்கின்றது. அதை எவரும் தடுக்க முடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாகத் தாக்கல் செய்வதாக இருக்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here