ஒருவருக்கு கொரோனா சந்தேகம்: ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சென்றவர்களை தனிமைப்பட அறிவுறுத்தல்!

அரச தகவல் திணைக்கள்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (13) காலை 09.30 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய தனிமைப்படுத்துமாறு அரசு தகவல் திணைக்களம் கோரியுள்ளது.

மாநாட்டின் கலந்து கொண்ட ஒரு பத்திரிகையாளர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நலக கலுவேவ தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஊடக மாநாட்டில் பங்கேற்ற அனைத்து ஊடகவியலாளர்களின் விவரங்களையும் அரசு தகவல் திணைக்களம், சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு சுகாதார அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகையாளர்களையும் வெளியில் நடமாடாமல் இருக்குமாறு, தகவல் திணைக்களத்திற்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பத்திரிகையாளரின் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை ஊடகயிலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரையும் சுயதனிமைக்குள்ளாகுமாறு கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here