சிரியாவின் டவுமா நகரை விட்டு வெளியேறிய கிளர்ச்சியாளர்கள்

சிரியாவின் ஜெய்ஷ் அல்-இஸ்லாம் கிளர்ச்சிப் படை வீரர்கள் டவுமா நகரில் இருந்து வடக்கு சிரியா பகுதிக்கு பஸ்ஸில் புறப்பட்டனர்.

சிரியாவின் டவுமா நகரில் இருந்து ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளியேறியுள்ளனர்.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. இதில் கிழக்கு கவுட்டா பகுதி 2012 முதல் ஜெய்ஷ் அல்-இஸ்லாம் என்ற கிளர்ச்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த பகுதியை குறி வைத்து அதிபர் ஆசாத் படைகளும் அவருக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்ய படைகளும் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களது ஆயுதங்களை அரசு படையிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியேறி உள்ளனர். சவுமா நகரில் இருந்து மட்டும் 85 பஸ்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வடக்கு சிரியா பகுதிக்கு சென்றனர். அந்தப் பகுதி தற்போதுவரை கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. டவுமா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் அதிபர் ஆசாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here