யாழில் அதிக விலைக்கு பொருட்களை விற்ற 76 வர்த்தர்கள்; பழைய இருப்பு என்கிறார்கள்: நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை!

யாழில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை தொடர்பாக 76 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் வடக்கு மாகாண பதில் உதவி பணிப்பாளர் ஏ.எல்.யவ்பர் சாதிக் தெரிவித்தார்.

தற்போது உள்ள கொரோணா தொற்று அனர்த்த நிலைமை காரணமாக பருப்பு, சீனி, ரின் மீன் ஆகிய பொருட்களில் இறக்குமதி வரி விலக்கப்பட்டு பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையும் அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் குறித்த பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படவில்லை எனவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு இன்றுவரை 76 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்

கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்த பணிப்பாளர், கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையங்களிற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள்
சென்று ஆராய்ந்தபோது வர்த்தகர்கள் தாம் பழைய விலைக்கு கொள்வனவு செய்து இருப்பில் உள்ள பொருட்களை தாங்கள் பழைய விலைக்கு விற்பனை செய்வதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலைக்கு கொள்வனவு செய்யும் பொருட்களை அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமைக் காரியத்தினருடன் கலந்தாலோசித்து வருவதாக  நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் வடக்கு மாகாண பதில் உதவி பணிப்பாளர் யவ்பர் சாதிக் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here