மேலும் 61 பேருக்கு தொற்று!

இன்று இதுவரை 61 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 58 பேர் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 3 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்மூலம் மினுவாங்கொட தொற்று அலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,850 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் பதிவான தொற்றாளர்கள் எண்ணிக்கை 5,305 ஆக அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 5 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,385 ஆக அதிகரித்தது.

தற்போது 14 வெளிநாட்டினர் உட்பட 1,907 நபர்கள் தொடர்ந்து 16 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 316 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here