கைக்குண்டுடன் வந்து யாழ் நகரில் திருட முற்பட்ட இளைஞன் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபரை பொலிசார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து வெடிக்கக்கூடிய நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொன்னகர் முறிகண்டியை வசிப்பிடமாக கொண்ட 22 வயதுடைய இளைஞனே கைக்குண்டுடன் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மோட்டார் சைக்கிள்களை திருடுவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். திருட்டில் ஈடுபடும் போது கைக்குண்டினை காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.

திருடிய மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதவானிடம் முற்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here