நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகரை தொடர்ந்து மிரட்டும் பொலிசார்!

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள மீண்டும் பொலிசார் தடைவிதித்துள்ளனர்.

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விவகாரமாக நீடித்து வருகிறது. ஆலய நிர்வாகத்தையும், பூசகரையும் நீதிமன்றத்தில் அடிக்கடி நிறுத்தி, பூசை வழிபாடுகளை நிறுத்த பொலிசார் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வழக்கில், ஆலய நிர்வாகத்தை கைது செய்ய வேண்டுமென பொலிசார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

ஏற்கனவே ஆலய வழிபாடுகளிற்கு பொலிசார் தடைவிதித்துள்ள நிலையில், பொதுமக்கள் ஆலயத்திற்கு தொடர்ந்து சென்று வந்தனர்.

இந்த நிலையில் சில தினங்களிற்கு முன்னர் ஆலய பூசகர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார். ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு சென்றாலும், பூசகரை கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால், தற்போது ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசைவழிபாடுகள் நடப்பதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here