“ஹோமோசெக்ஸ்“ ஆர்வலர்: தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருக்கு எதிராக வெடிக்கவுள்ள அடுத்த குண்டு!


தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தொடர்பான அந்தரங்க தகவல்களை, இரகசியமாக லீக் செய்யும் முயற்சியில் அந்த கட்சியின் பிரதேச கிளையொன்றின் உறுப்பினர்களே இரகசியமாக ஈடுபட்டு வரும் சுவாரஸ்ய சம்பவம் தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழரசுக்கட்சியின் மக்கள் பிரதிநிதி ஒருவர், கட்சியினதும், மூலக்கிளைகளினதும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது உதவியாளர் ஒருவரை வரும் மாகாணசபை தேர்தலில் களமிறக்க முயற்சித்து வருகிறார். இது கட்சி பிரமுகர்கள் மட்டத்திலும், குறிப்பிட்ட மூலக்கிளையிலும் பெரும் பூகம்பமாகி வருகிறது. எனினும், தனது முடிவில் சற்றும் மனம் தளராத அந்த முக்கிய உறுப்பினர், குறிப்பிட்ட உதவியாளரை மாகாணசபை தேர்தலில் களமிறக்கியே தீருவேன் என்ற முடிவில் இருக்கிறார்.

இந்த நிலையில், அதிருப்தியடைந்த குறிப்பிட்ட மூலக்கிளை உறுப்பினர்கள் அந்த முக்கியஸ்தர், குறித்த தகவல்களை ஊடகங்களிற்கு லீக் செய்து அண்மை நாட்களில் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தனர். எனினும், முக்கியஸ்தர் தனது முடிவை மாற்றிக் கொள்ளாததையடுத்து, அவருக்கு உச்சப்பட்ட அதிர்ச்சியளிக்கும் முயற்சியில் அதிருப்தியாளர் அணி இறங்கியுள்ளது. சில பிரதேசசபை உறுப்பினர்களும் இதில் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.

குறிப்பிட்ட முக்கியஸ்தர் ஓரினசேர்க்கை பழக்கமுடையவர், சில வருடங்களின் முன்னர் வரை தன்னுடன் பணிபுரிந்த உதவியாளர்கள் சிலருடன் அந்தரங்க தொடர்பை பேணினார், அதற்கான ஆதாரங்களை ஒலி வடிவில் திரட்டியுள்ளோம் என அதிருப்தியாளர்கள் கடந்த வாரம் பல ஊடகங்களை தொடர்பு கொண்டிருந்தனர். தமிழ் பக்கத்திற்கு நெருக்கமான தரப்புக்களுடனும், சில தரப்பினர் இது தொடர்பில் பேசினார்கள். எனினும், இந்தவகையான வெளிப்படுத்தல்களை செய்ய தமிழ்பக்கம் மறுத்து விட்டது.

குறிப்பிட்ட பிரமுகரும், அவரது உதவியாளர்களும் கட்சி அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் அந்தரங்க தொடர்பில் இருந்ததை, அப்போது அலுவலகத்தில் பணிபுரிந்த சிலரது வாக்குமூலங்களை குரல் வழி பதிவுசெய்துள்ளோம். காவலாளி தொடக்கம், அங்கு பணிபுரிந்த முக்கியஸ்தர்கள் வரை பலரும் இதைப்பற்றி பேசியுள்ளதாக அதிருப்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பகிரங்கமாக பதிவேற்ற சில ஒலிப்பதிவுகளை கையளிக்கவும், சம்பவத்தை ஊடகங்களிடம் உறுதிப்படுத்த சில ஒலிப்பதிவுகளையும் அவர்கள் கைவசம் வைத்திருப்பதாக தெரிகிறது.

குறித்த முக்கியஸ்தருக்கும் மூலக்கிளை உறுப்பினர்களிற்குமிடையிலான முரண்பாடுகள் நாளுக்குநாள் முற்றி வரும் நிலையில், விரைவில் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் முயற்சியை அதிருப்பதியாளர்கள் மேற்கொள்லலாமென தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here