சபை அமர்வின் போது மண்டப மேல் கூரை இடிந்து விழுந்தது!

மாத்தளை- லக்கல பிரதேச சபையின் மாதாந்த கூட்டத் தொடர் நேற்று (15) நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​சபை கட்டிடத்தின் மேல் கூரை  திடீரென இடிந்து விழுந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து சபை அமர்வை, பிரதேசசபை தலைவர் புத்த சேனரத்ன ஒத்திவைதத்தார்.

காலை 9 மணியளவில் மாதாந்த கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இடிந்து விழுந்தது.  இந்த கட்டிடம் சமீபத்தில் கட்டப்பட்ட லக்கல பசுமை நகரத்தில் அமைந்துள்ளது.

மேற்கூரை இடிந்து விழுந்தபோது மண்டபத்தில் சுமார் 15 சபை உறுப்பினர்கள் இருந்தனர். எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here